இலங்கை பிரதான செய்திகள்

பிரதமரை பதவி விலகுமாறு கோரும் தார்மீக பொறுப்பு ஜனாதிபதிக்கு கிடையாது:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு கோரும் தார்மீக பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடையாது என கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ அல்லது அவரது குழுவினரோ கோரிக்கை விடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற மாற்றத்தினை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்பே முன்னின்று செயற்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர், மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு அமைய பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் பிழையான வழிநடத்தல்களுக்கு உடன்படாது ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டை சரியான வழியில் ஆட்சி செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.