இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 -மன்னாரில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு :

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 திகதி முதல் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) வயது-71 என்பவர் நேற்று புதன் கிழமை(18) மாலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய், உவரி காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மன்னார் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலினையடுத்து மன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்ட போதே குறித்த சடலம் காணாமல் போன மனுவேல் பிள்ளை (அல்பேட்) என்பவருடையது என தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரனைகளை மன்னார் காவல்துறையினர் ; மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த 26 ஆம் திகதி மதியம் வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் 8 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை

Apr 4, 2018 @ 02:54

விடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட 8 பிள்ளைகளி ன் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) வயது-71 என்பவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த 26 ஆம் திகதி மதியம் வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடியும் எங்கும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் அவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் கடந்த சனிக்கிழமை(31) மன்னார் காவல் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது 077-3284387, 071-6103546 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers