ஜெர்மனியில் உள்ள சுரங்கத்தில் இரு புகையிரதங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 20க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டூயிஸ்பர்க் நகரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயம் அடைந்த பயணிகளை மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Add Comment