இலங்கை பிரதான செய்திகள்

“யாரைக் கேட்டு EPDPயு­டன் பேசி­னீர்­கள்” – சிறீ – “எங்களைக் கேட்டா அறிக்கை விட்டீர்” மாவை…

உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்கு ஈ.பி.டி.பியின் ஆத­ரவு கோரிய விவ­கா­ரத்­தால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில்  கார­சா­ர­மான விவா­தம் நடை­பெற்­றுள்­ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வன்­னிப் பிர­தே­சத்­தில் உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளில் ஆட்சி அமைப்­பது தொடர்­பில் நேற்­றுப் பேசப்­பட்­டுள்­ளது. இதன்­போது, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன், யாழ்ப்­பா­ணத்­தில் ஈ.பி.டி.பியு­டன் இணைந்து ஆட்சி அமைத்­துள்­ளமை தொடர்­பில் கேள்வி எழுப்­பி­யுள்­ளார். யாரைக் கேட்டு ஈ.பி.டி.பியு­டன் பேசி­யுள்­ளீர்­கள் எனக் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

இந்த நிலையில்  “ஈ.பி.டி.பியு­டன் நாங்­கள் பேச­வில்லை , மதத் தலை­வர்­கள், வர்த்­தக சமூ­கத்­தி­னரே பேசி­னர்” என  கூட்­ட­மைப்பு தலை­மை­யால் பதில் அளிக்கப்பட்டுள்ளது. “அப்­ப­டி­யா­னால் அவர்­களே பேச­வேண்­டி­ய­து­தானே, பின்­னர் ஏன் நாடா­ளு­மன்ற றுப்­பி­னர்­க­ளான மாவை, மற்­றும் சுமந்­தி­ரன் ஆகியோர் டக்­ளஸ் உடன் அலை­பே­சி­யில் பேசி­னீர்­கள்” என சிறி­த­ரன் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

“நாங்­கள் ஆத­ரவு கோரிப் பேச­வில்லை” என பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது. “நாராந்­த­னை­யில் உங்­கள் (மாவை) தலை­யில் வெட்டு விழுந்­தது. இரு­வர் உயி­ரி­ழந்­த­னர். அதை எல்­லாம் மறந்து டக்­ளஸ் உடன் எப்­படி பேசி­னீர்­கள்” என்­றும் சிறி­த­ரன் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

 “நான் பேச­வில்லை”  என மாவை.சேனா­தி­ராசா மறுத்­துள்­ளார். “நீங்­கள் எங்­க­ளி­டம் கேட்ட பின்­னரா ஈ.பி.டி.பியு­டன் இணைந்து ஆட்சி அமைப்­ப­தை­விட எதிர்­கட்­சி­யாக இருப்­பேன் என அறிக்கை விட்டீர்கள் எம்மை கலந்தாலோசித்து அறிக்கை விட்­டி­ருக்­க­லாம்­தானே”    என சிறி­த­ர­னி­டம், மாவை. கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

“நீங்­கள் டக்­ள­ஸு­டன் பேச முன்­னர் எங்­க­ளி­டம் கேட்­டி­ருக்­க­லாமே ?” என சிறி­த­ரன் திருப்பி கேள்வி எழுப்­பி­யுள்­ளார். “அந்­தக் காலத்­தில் நீங்­கள் இங்கு இல்லை” என பதில் வழங்­கப்­பட்­ட­தும், “நான் இல்­லா­வி­டி­னும் இங்­குள்­ள­வர்­க­ளு­ட­னா­வது கேட்டா டக்­ள­ஸு­டன் பேசி­னீர்­கள்” என சிறி­த­ரன் திருப்­பிக் கேள்வி எழுப்­பி­யுள்­ளார் .

 இதே வேளை டக்­ள­ஸு­டன் பேசி­யமை தவறு என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வ­னும், இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link