இலங்கை பிரதான செய்திகள்

பூநகரி பிரதேச சபையின் முதல் அமர்வில் ஜனநாயக மரபுகள் மீறப்பட்டுளளன.

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பூநகரி பிரதேச சபையின் முதலாவது அமர்வில் ஜனநாயக மரபுகள் மீறப்பட்டு உபக்குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. நான்கு உபக்குழுக்களிலும் எதிர்தரப்பினைச் சேர்ந்த எவரும் இல்லை என எதிர்தரப்பு உறுப்பினர் ஞானம் ரதிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் முதலாவது அமர்வு நேற்றையதினம்(04-04-2018)  சபையின் மாநாட்டு மண்டபத்தில்

தவிசாளர்  அருணாசலம் ஜயம்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது

இதன் போது உபகுழுக்கள் தெரிவு இடம்பெற்றது   இச் சந்தர்ப்பததில் சபையின் பொறுப்பை உப தவிசாளர் சி. சிறிரஞ்சனிடம் வழங்கி விட்டு தவிசாளர் சபையில் அமர்ந்துகொண்டார். உபதவிசாளர் நிதிக்குழுவை ஜனநாயக மரபின் படி  தெரிவுக்கு பதிலாக நிதிக்குழுவில்  தங்களின்  ஆளும் கட்சி  உறுப்பினர்களை மட்டும் உள்ளடக்கிய பெயர்களை குறிப்பிட்டு நியமனம் செய்தார் .
இதற்கு எதிர்ப்பினர் ஜனநாயக மரப்பின்படி உபக் குழுக்கள்  சபையிலேயே தெரிவு செய்யப்படல் வேண்டும் அத்தோடு எதிர்தரப்பு உறுப்பினர்களும் உள்ளடக்கப்படல் வேண்டும் என்று தங்களின் ஆட்சேபனையை  தெரிவித்தனர்.  இந்த நிலையில்  உபதவிசாளரால்  குறித்த தங்களின் நியமனம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு  தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக  வாக்களித்து தங்களின் ஆளும் கட்சி உறுப்பினர்களை மாத்திரமே நிதிக் குழுவில் நியமனம் செய்துள்ளனர்.
 பிரதேச சபைகளில் நிதிக் குழு முக்கியமான குழு  இதில் தங்களுடைய ஆளும் தரப்பினர்களை மாத்திரம் நியமனம் செய்திருப்பது அவர்கள் எதிர்காலத்தில்  ஊழல் மட்டும் முறைகேடுகளை செய்வதற்கான முன்னேற்பாடாகவே கருதவேண்டியுள்ளது. எனத் தெரிவித்த ரதிகரன்
ஏனைய குழுக்களின்  தெரிவிலும் ஆளும் தரப்பினர் சபையில் தெரிவுகளை மேற்கொள்ளாது ஏற்கனவே தாங்கள் திட்டமிட்டு தயாரித்து வந்த எதிர் தரப்பினர்களின் பெயர்களும் உள்ளடங்கிய பட்டியலை வாசித்து நியமித்து வந்தனர் இதனால் நாங்கள் எதிர்புத்  தெரிவித்து ஏனைய குழுக்களிலும் அங்கம் வகிக்க வில்லை.எனவும் குறிட்ட அவர்
சபையில்  நிதிக்குழு, சுகாதாரகுழு, செயற்குழு. வீடமைப்புக் குழு என நான்கு குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன. இந்த நான்கு குழுக்களும் ஜனநாயக மரபை மீறி நியமனக் குழுக்களாக காணப்படுகின்றன. எனவும்  தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.