குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாபா, எஸ்.பி திஸாநாயக்க, டபிள்யூ.டி.செனவிரட்ன, சந்திம வீரக்கொடி, உள்ளிட்டவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாளைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
Spread the love
Add Comment