ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி பிரதமர் இல்லத்திற்கு வெளியே இன்று போராட்டம் நடத்திய தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்றஉறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி இந்திய மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் நடிகர் பவன் கல்யானின் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வை.எஸ்.ஆர் , காங்கிரஸ் நாடாளுமன்றஉறுப்பினர்கள் 5 பேர் பதவிவிலகியிருந்தனர்.
இந்நிலையில், டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்திற்கு வெளியே தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஒன்று திரண்டு போராட்டம் nமுற்கொண்டிருந்தனர்.
கோரிக்கைகள் ஏந்திய பதாகைகளை வைத்திருந்த அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Add Comment