உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

இந்திய பெண்கள் அணியுடனான போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றி

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணியை இங்கிலாந்து பெண்கள் அணி வென்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டி இன்று நடைபெற்றது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா துடுப்பாட்த்தினை தெரிவு செய்தநிலையில் 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. பின்னர் 114 என்ற வெற்றி இலக்குடன் களமிறங் இங்கிலாந்து அணி 29 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 117 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது

இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா 1-1 என சமநிலையில் உள்ளது. இறுதிப்போட்டி எதிர்வரும் 12ம்திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers