பிரதான செய்திகள் விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பற் கம்மின்ஸ் விலகல்


ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்  பற் கம்மின்ஸ் (Pat Cummins) விலகியுள்ளார். பற் கம்மின்ஸை 5.40 கோடி ரூபாக்கு ஏலத்தில் எடுத்திருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடந்த முதல்போட்டியிலேயே பற் கம்மின்ஸ் முதுகுவலி காரணமாக விளையாடவில்லை. இந்தநிலையில் தற்பொழுது முழுவதுமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்தே  பற் கம்மின்ஸ்க்கு முதுகு வலி இருந்தது எனவும் ஸ்கான் செய்து பார்த்ததில் இடுப்புப்பகுதியில் எலும்பு தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் தொடர்ந்து அவரால் விளையாட முடியாது எனவும் அவுஸ்திரேலிய அணியின் உடல்தகுதி வல்லுநர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து மிட்ஷெல் ஸ்டார்க் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், இப்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் 2-வது அவுஸ்திரேலியவர் கம்மின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.