இலங்கை பிரதான செய்திகள்

முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் குறித்து பொறுத்த நேரத்­தில் அறி­விப்­போம் :


வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் யார் என்­பதை பொறுத்த நேரத்­தில் அறி­விப்­போம் என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்துள்ளார். வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் மாதம் 25ஆம் திக தி­யு­டன் முடி­வ­டையவுள்ள நிலையில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் போட்­டி­யிட்டு முத­ல­மைச்­ச­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்ட சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அடுத்த மாகாண சபைத் தேர்­த­லில் கூட்­ட­மைப்­பின் சார்­பில் போட்­டி­யிட மாட்­டார் என அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்தநிலையில் கூட்­ட­மைப்­பின் சார்­பில் அடுத்த முத­ல­மைச்­சர் யார் என்­பது தொடர்­பில், இரா.சம்­பந்­த­னி­டம் திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் செய்­தி­யா­ளர்­க­ளால் கேள்வி எழுப்­பப்­பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தொடர்­பில் உத்­தி­யோ­க­பூர்வ முடிவு எதுவும் தற்போது எடுக்­க­வில்லை எனவும் பொறுத்த நேரத்­தில், பொருத்­த­மான வேட்­பா­ள­ரை கள­மி­றக்­கு­வோம் எனவும் இரா.சம்­பந்­தன் தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap