இலங்கை பிரதான செய்திகள்

அம்பாறையில் திகா குழுவா இல்லவே இல்லை- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

அம்பாறையில் திகா குழு என்ற பெயரில் சிங்கள வன்முறை குழு இயங்கி வருவதாக தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியும் அரசியல்வாதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த பொய் தகவல் கனடாவில் இருந்து பரப்பட்டுள்ளதாகவும்  இதனை பரப்பியவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆதரவாளர் உனவும் அவர் கூறியுள்ளார். அம்பாறையில் திகா என்ற பெயரில் சிங்கள பௌத்த வன்முறை இயங்குவதாகவும் வன்முறைகளின் பின்னணியில் இந்த குழு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் இந்த குழு குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் திகா என்ற பெயரில் அம்பாறையில் வன்முறை குழு எதுவுமில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.