இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தில் மோடி – தற்கொலை செய்த இளைஞர்…

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்தியப் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் 25 வயதான தர்மலிங்கம் என்னும் இளைஞர் இன்று அதிகாலை தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு என தெரிவித்து தீக்குளித்துள்ளார். உடனடியாக அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதேவேளை ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக இன்று காலை பிரதமர் மோடி சென்னை சென்றடைந்துள்ளார். விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை ஆளுனர் முதல்-அமைச்சர் ஆகியேயர் வரவேற்றனர்

சென்னை சென்ற அவர் ராணுவ தளவாட கண்காட்சியை ஆரமபித்து வைத்துள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 14ம் திகதிவரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers