குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில் புரியும் பெண்களின் சம்பளம் உறுதி செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சம அளவில் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென அண்மையில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சம்பள முரண்பாடுகள் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும் எனவும், மேலும் பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு திருப்திகரமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு இன்னும் பல்வேறு விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென தொழில்துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment