இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்து அணியுடனான தொடரை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியுள்ளது

3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்ற நிலையில் 3-வது மற்றும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

நூயணச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தினை தெரிவுசெய்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதையடுத்து 202 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியதுடன் தொடரையும் 2-1 என கைப்பற்றியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.