இந்தியா பிரதான செய்திகள்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடும்மழை 44 பேர் பலி…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கடும்மழையில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் கடந்த சில் தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 18 மாவட்டங்களில் நேற்று பெய்த பேய் மழையில் சிக்கி இதுவரி 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் 180க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவில் 15 பேரும், பெரோசபாத், மதுராவில் தலா 4 பேரும், உன்னாவ் பகுதியில் 3 பேரும், பைசாபாத், பாரபங்கி, லக்கிம்பூர் கேரி பகுதிகளில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழையினால் சேதமான மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 8 கோடி ரூபாய் அரசு நிதியுதவி ஒதுக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.