இலங்கை பிரதான செய்திகள்

தவராசாவின் எதிர்கட்சித் தலைவர் பதவியும் பறிபோகுமா?

வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் சி.தவ­ராசா இருந்­து­வ­ரும் நிலை­யில், அந்­தப் பத­வியை  தமக்கு வழங்­கு­மாறு, மாகாண சபை­யில் அங்கம் விகிக்கும்  ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி  கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத­னால் அந்­தப் பத­வி­யைப்  கொடுப்­பதா அல்­லது தொடர்ந்­தும் தவ­ரா­சா­வையே இருக்க அனு­ம­திப்­பதா என்­பது தொடர்­பில் இழு­ப­றி­நிலை காணப்­ப­டு­கவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகா­ண­ச­பைத் தேர்­த­லின் பின்­னர் சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக ஈ.பி.டி.பி கட்­சியை சேர்ந்த க.கம­லேந்­தி­ரன் (கமல்) பதவி வகித்­தார். அதே கட்­சி­யைச் சேர்ந்த, பிர­தேச சபைத் தவி­சா­ள­ராக இருந்த றெக்­க்ஷி­யன் என்­ப­வ­ரைத் துப்­பாக்­கி­யால் சுட்­டுக் கொலை செய்த குற்­றச்­சாட்­டில் கமல் கைது செய்­யப்­பட்­டார். அவர் விளக்க மறியலில்  வைக்­கப்­பட்­டார். அதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கமல், மாகாண சபை உறுப்பினர் பதவியையும் இழந்தார். இந்த நிலையில், பட்டியலில் அடுத்து இருந்த தவராசா உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு எதிர்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டார்.

அதன்­பின்­ன­ரும், அவ­ரது கட்­சிக்­குள் ஏற்­பட்ட உள் முரண்­பா­டு­ கள் கார­ண­மாக சி.தவ­ரா­சா­வை­யும் அந்­தப்­ப­த­வி­யில் இருந்து நீக்க வேண்­டும் என்று ஈ.பி.டி.பியி­னர் பல முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­த­னர். எனி­னும் சபை­யில் அதற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தும் தவ­ரா­சாவே எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக பத­வி­வ­கித்து வரு­கின்­றார்.

வடக்கு மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் சில மாதங்­க­ளில் நிறை­வு­பெ­ற­வுள்­ளது. இந்­த­நி­லை­யில் சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் இருந்து தவ­ரா­சாவை நீக்­கி­விட்டு ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி சார்­பா­கப் போட்­டி­யிட்டு வவு­னியா மாவட்ட மாகாண சபை உறுப்­பி­ன­ராக உள்ள பெரும்­பான்மை இனத்தை சேர்ந்த ஜெய­தி­ல­கவை அந்­தப் பத­விக்கு நிய­மிக்க வேண்­டும் என்று ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் மாகாண உறுப்­பி­னர்­கள், மாகாண சபை­யின் அவைத்­த­லை­வ­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­னர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers