கர்நாடக சிறையில் சிறைரவக்கப்பட்டிருந்த சந்தனக்கடத்தல்காரரான வீரப்பனின் நண்பரான சைமன என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1993ஆம் ஆண்டு கர்நாடகாவில் வீரப்பனின் நணபர்கள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டிருநடதனர்.
இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட் சைமனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சைமன் உயிரிழந்து விட்டதாக கர்நாடக சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. வீரப்பன் கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தருமபுரி மாவட்டம் பாடி கிராமத்தில் அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment