இலங்கை பிரதான செய்திகள்

மேலும் அமைச்சர்கள் சிலரும் எதிரணியில் அமர்வார்கள்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமைச்சர் பதவிகளில் இருந்த விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் தினத்தில் தற்போது அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்து வரும் மேலும் சிலர் எதிரணியில் அமர்வார்கள் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய அனைவரும் கட்டாயம் எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எதிரணியில் அமர்வோம். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத சிலரும் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.
ஜனாதிபதி நாடு திரும்பியதும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூடி அரசாங்கத்தில் இருந்து விலக உத்தியோபூர்வமான அனுமதியை வழங்கும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap