உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

தரவரிசையில் நடால் – சிமோனா தொடர்ந்தும் முதலிடம்


உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசையில் ரபெல் நடால் மற்றும் சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றனர். உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.  இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 8,770 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 8,670 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், குரோஷியா வீரர் மரின் சிலிச் 4,985 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 8,140 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 6,790 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 6,065 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 9 other subscribers