மட்டக்களப்பில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய, தங்கவேல் ஜெயராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) மாலை முதல் இவரைக் காணவில்லையென, அவரது மனைவி மட்டக்களப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்
இதையடுத்து அவர் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சின்ன உப்போடை, வாவிக்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் இவரது சடலம் ஒதுங்கியுள்ளதாகவும் அவரது மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment