Home இலங்கை சில பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளிலிருந்து செயற்பட்டு வருகின்றனர் :

சில பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளிலிருந்து செயற்பட்டு வருகின்றனர் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சில பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளிலிருந்து செயற்பட்டு வருவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் காவல்துறையினர் தொடர்ந்தும் தேடுதல் வேட்டைகளை முன்னெடுப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து சில பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாகவும், அண்மைய நாட்களில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் மறைந்து வாழும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய வெளிநாடுகளின் உதவியை அரசாங்கம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More