குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட கட்டுவான் சந்திக்கு அருகில் உள்ள வீட்டு கிணற்றடியில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டு உள்ளன. கடந்த 28 வருடகாலமாக இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த 13ஆம் திகதி இராணுவத்தினரால் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.
அவ்வாறு கையளிக்கப்பட்ட கட்டுவான் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றின் கிணற்றடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் மோட்டார் குண்டுகள் காணப்பட்டன. அவை தொடர்பில் அங்கிருந்தவர்களால் அருகில் இருந்த இராணுவ முகாமுக்கு தெரிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் அவற்றை பார்வையிட்டனர். . பின்னர் மோட்டார் குண்டுகள் தொடர்பில் வெடிபொருட்கள் அகற்றும் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.
Add Comment