குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடு என்ற ரீதியில் இலங்கையின் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவர்கள் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களினால் மக்கள் பெரும் நெருக்கடிகளையும் சிக்கல்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் மனிதர்களை பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப் பிரச்சினையை நாங்கள் நோக்குகின்றோம் என குறிப்பிட்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய உலகில் அதிகளவில் போராட்டங்கள் நடத்தப்படும் நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment