இலங்கை பிரதான செய்திகள்

அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டதுடன், அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்

இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில், கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 10-45மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.