இலங்கை பிரதான செய்திகள்

TNAக்கு சவால் விடுக்கும் நகர்வுக்கு விக்கி தலமையேற்கிறார்?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் விடுக்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர்கள் மாநாடு ஒன்றை கூட்டவுள்ளதாக சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் தமிழ் மக்கள் பேரவை ஊடக இந்த இளைஞர்கள் மாநாட்டை கூட்டவுள்ளார்.

வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு வழங்க ஈபிஆர்எல்எப் தலைவர் முன்வந்துள்ளார். எனினும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதுவரை எந்த முவுவையும் எடுக்கவில்லை என அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே வடக்கு முதலமைச்சருக்கு பின்னால், இருக்கும் நபர்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது என அந்த இணையத் தள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.