குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பத்மராஜன் எனும் நபரே உயிரிழந்தவராவார். அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் இன்று சனிக்கிழமை இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. அதன் போது மயங்கி விழுந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
Add Comment