சினிமா பிரதான செய்திகள்

திரைக்கு வருகிறது அரவிந்சாமியின்  பாஸ்கர் ஒரு ராஸ்கல்…


அரவிந்த்சாமி – அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் அடுத்த வாரம் திரையிடப்படவுள்ளது. இந்தப் படத்தை  சித்திக் இயக்கியுள்ளார். அக்‌ஷன் கலந்த குடும்ப கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 27ஆம் திகதி வெளியாகின்றது.

ரஜனிகாந்த், மம்முட்டி நடித்த தளபதி படத்தில் துணைப் பாத்திரமாக நடித்த அரவிந்சாமி ,1992ஆம் ஆண்டில் ரோஜா படத்தில்  நாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1995இல் பம்பாய் படத்தில் நடித்து பெரும் கவனத்தை ஈர்த்தார்.  இந்த நிலையில் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல். இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் இயக்கி உள்ளார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்க இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோருடன், மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.

சித்திக் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேல் நடித்திருக்கிறார்.

அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். சண்டை மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம்  அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில்  உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.  ஹர்ஷினி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பரதன் பிலிம்ஸ் நிறுவனம் எதிர் வரும் மார்ச் 29ஆம் திகதி வெளியிடுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers