இலங்கை பிரதான செய்திகள்

உதயங்க வீரதுங்கவை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு டுபாய் மறுப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு டுபாய் அரசாங்கம் மறுப்பு வெளியிட்டுள்ளது.  உதயங்களை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் அரசாங்கம் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், இது வரையில் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவின் கோரிக்கைக்கு அமைய டுபாய் அதிகாரிகள் உதயங்கவை கைது செய்திருந்தனர். மிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உதயங்கவை கைது செய்வதற்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. எவ்வாறெனினும் இதுவரையில் உதயங்கவை மீள நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.