இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாண அமைச்சுக்கள் மீதான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த கோரி பிரேரணை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாண சபை­ அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­கள் ஆகி­ய­வற்­றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யின் பரிந்­துரை­களை விரைந்து சபை­யின் ஆயுள் காலத்துள் அதாவது எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் 25ஆம் திக­திக்குள் நிறை­வேற்­று­மாறு எதிர்­வரும் வியா­ழக்கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள மாகாண சபை அமர்வில் தீர்­மா­னம் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது.

நிதி மோச­டி­கள், அதி­கார முறை­கே­டு­கள் உள்ளிட்ட பல்­வேறு குற்­றச்சாட்­டுக்­கள் தொடர்­பில் காலத்­துக்குக் காலம் விசா­ர­ணைக் குழுக்கள் அமைக்­கப்­பட்டு விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டிருந்தன.  அந்த விசா­ரணை அறிக்­கை­கள் பகிரங்­கப் படுத்தப்படவில்லை என்­ப­து­டன, அவற்­றின் பரிந்­து­ரை­க­ளும் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தப்­படவில்லை.

ஆரம்ப விசா­ர­ணை­க­ளில் தவ­றிழைத்­தவ­ராக அடை­யா­ளம் காணப்­ப­டு­ப­வர்­கள் மீது, முறை­யான முழு­மை­யான விசா­ரணை நடத்­தப்­பட்டு குற்­றச்­சாட்­டுப் பத்­தி­ரம் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்­டும், உயர் அதி­கா­ரி­கள் சிலர் இத­னால் தண்­ட­னை­க­ளி­லி­ருந்து தப்­பித்து தொடர்ந்­தும் பத­வி­களில் உள்­ள­னர் என்ற குற்­றச்­சாட்­டும் நிலவி வரும் நிலை­யி­லேயே இந்­தத் தீர்­மா­னம் வடக்கு அவைக்கு கொண்டு வரப்­பட்­டவுள்ளது

வடக்கு மாகாண சபை­யின் 121ஆவது அமர்வு எதிர்­வ­ரும் வியா­ழக்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த அமர்­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அ.பரஞ்­சோதி மேற்­படி தீர்­மா­னத்தை சபைக்கு கொண்டு வர­வுள்­ளார்.

அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,

வடக்கு மாகாண சபை­யின் ஆளு­கைக்கு உட்­பட்ட அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­கள், அதி­கார சபை­கள் மற்­றும் அதன் கீழ் இயங்­கும் நிறு­வ­னங்­க­ளில் நடை­பெற்ற ஊழல்­கள், மோச­டி­கள், முறை­கே­டு­கள், நிதி கையா­டல்­கள் சம்­பந்­த­மாக பல விசா­ர­ணைக் குழுக்­கள் நிய­மிக்­கப்­பட்­டன. அந்­தக் குற்­றச்­சாட்­டுக்­கள் விசா­ரிக்­கப்­பட்டு பல சிபா­ரி­சு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அந்த சிபா­ரி­சு­கள் சம்­பந்­த­மாக இது­வரை எந்­த­வி­த­மான ஆக்க பூர்­வ­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. வடக்கு மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் நிறை­வ­டைய இன்­னும் சில காலமே உள்­ளது. இது சம்­பந்­த­மான நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது.

விசா­ரணை அறிக்­கை­க­ளில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சிபா­ரி­சு­க­ளின் அடிப்­ப­டை­யில் சட்ட நட­வ­டிக்கை எடுக்க ஏற்ற ஒழுங்­கு­களை செய்ய வேண்­டும் என்று இந்த சபையை கோரு­கின்­றேன் – என்­றுள்­ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.