குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜுவென்டொஸ் கழகத்தை வீழ்த்திய நாபொலி அணிக்கு ரசிகர்கள் பெரும் அளவிலான வரவேற்பினை வழங்கியுள்ளனர். ஜவென்டொஸ் கழகத்தை வீழ்த்தி வெற்றியீட்டிய நாபொலி அணி, நாபொல் விமான நிலையம் ஊடாக சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். நாபொலி கழகத்தின் திறமையை பாராட்டுவதற்கு 10,000 முதல் 20,000 வரையிலான ரசிகர்கள் விமான நிலையத்திற்கு அருகாமையில் குழுமியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் நாபெல்ஸ் கழகம் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற வெற்றியீட்டியுள்ளது. நாபொலி, கழகம், இத்தாலி கழக மட்ட போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்று 28 ஆண்டுகள் கடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இன்னும் ஒரே ஒரு புள்ளி பெற்றுக்கெண்டால் நாபொலி கழகம் சம்பியன் பட்டத்தை வெல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment