இலங்கை பிரதான செய்திகள்

மெல்லத் தமிழ் இனி சாகும் – சிங்கள ஊழியர் மயமாகும் யாழ்ப்பாணம்…

!

வடக்கு – கிழக்­கில் சிற்­றூ­ழி­யர் க­ளாக சிங்­க­ள­வர்­கள் நிய­மிக்­கப் ப­டக் கூடாது என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வைத்த கோரிக்­கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் என பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அளித்த வாக்­கு­றுதி 20 நாள்­க­ளுக்­குள் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி சிற்­றூ­ழி­யர்­க­ளாக தென்­ப­கு­தி­யைச் சேர்ந்த சிங்­க­ள­ வர்­கள், யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த இரண்டு தினங்­க­ளில் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். மாவட்­டச்  செயலகத்திற்கு தெரி­யா­மல் நேர­டி­யாக பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு இந்த நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் சமுர்த்தி சிற்­றூ­ழி­யர்­க­ளுக்கு 16 வெற்­றி­டங்­கள் நில­வு­கின்­றது. இந்த வெற்­றி­டங்­களை நிரப்ப வேண்­டும் எனக் கோரி, யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தால் பல­முறை கோரிக்கை விடுக்­கப்­பட்ட போதும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

தற்­போது யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் பருத்­தித்­துறை, நல்­லூர், சாவ­கச்­சேரி பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு கண்­டி­யைச் சேர்ந்த சிங்­கள மொழி பேசு­வோர் சிற்றூழியர்களாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். அமைச்­சால் வழங்­கப்­பட்ட நிய­ம­னக் கடி­தங்­க­ளு­டன் அவர்­கள் நேர­டி­யாக பிர­தேச செய­ல­கங்­க­ளுக்­குச் சென்­றுள்­ள­னர்.

சிங்­கள சிற்­றூ­ழி­யர் நிய­ம­னம் வழங்­கப்­பட்­டமை தொடர்­பில் மாவட்­டச் செய­லக சமுர்த்தி திணைக்­க­ளத்­துக்கு எந்­த­வொரு தக­வ­லும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

“இந்த நிய­ம­னத்­துக்­கான நேர்­மு­கத் தேர்வு அறி­வித்­தல் வெளி­யி­டப்­பட்­டமை தொடர்­பாக எமக்கு எந்­த­வொரு தக­வ­லும் கிடைக்­க­வில்லை. சமுர்த்தி அமைச்­சாலோ, திணைக்­க­ளத்­தாலோ எந்­த­வொரு கூட்­டங்­க­ளி­லும் தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வு­மில்லை. இங்­குள்ள வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வது என்­பது தொடர்­பி­லுமோ எது­வும் அறி­யத் தரப்­ப­ட­வில்­லை”-­என மாவட்ட சமுர்த்தி திணைக்­கள அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

பிரதமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை, ஆத­ரிப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 10 நிபந்­த­னை­களை விதித்­தி­ருந்­தது. வடக்கு – கிழக்­கில் சிற்­றூ­ழி­யர்­க­ளாக சிங்­க­ள­வர்­கள் நிய­மிக்­கப்­ப­டக் கூடாது என்­ப­தும் அந்த நிபந்­த­னை­க­ளில் ஒன்று.

இந்த நிபந்­த­னை­க­ளைச் செயற்­ப­டுத்­தப்­ப­டும் என பிரதமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க கையெ­ழுத்­திட்டு கூட்­ட­மைப்­புக்கு கடி­தம் வழங்­கி­யி­ருந்­தார். தமிழ்த் தேசி­யக்  கூட்டமைப்பின்  நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் கடந்த 4ஆம் திகதி இடம்­பெற்­ற­போது, கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் அந்­தக் கடி­தத்தை காண்­பித்­தி­ருந்­தார்.
வாக்­கு­றுதி வழங்கி 20 நாள்­க­ளுக்­குள்­ளேயே  அதனை பிரதமர் உதாசீனம் செய்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap