இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

பெங்களூர் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி – கோலிக்கு அபராதம்

நேற்று நடைபெற்ற பிஎல் தொடரின் 24வது போட்டியில் பெங்களூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ் அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 206 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது .

இதேவேளை சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் தாமதமாக பந்து வீசுவது பெங்களூர் அணிக்கு இது முதல் முறை என்பதனால் அணியின் தலைவர்   விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers