இலங்கை

தினேஷின் ஜாதகம் ராஜயோகமுடையது என்கிறார் ராஜீவ் காந்தியை தாக்கிய விஜேமுனி …

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் தினேஷ் குணவர்தனவின் ஜாதகம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஜாதகத்திற்கு இணையான ராஜயோகத்துடன் இருப்பதாக ஜோதிடர் விஜித் ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார். தினேஷ் குணவர்தனவின் ஜாதகத்திற்கு அமைய அவர் எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தலைவராகவோ பிரதமராகவோ பதவிக்கு வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தினேஷ் குணவர்தனவுக்கு கட்டாயம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என தெரிவித்துள்ள விஜேமுனி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டில் இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகிப்பார் எனவும் மகிந்த ராஜபக்ச பிரதமராக தெரிவுசெய்யப்படுவார் எனவும் கூறியுள்ளார்.

முன்னாள் கடற்படை சிப்பாயான ஜோதிடர் விஜித் ரோஹன விஜேமுனி, இலங்கை இந்திய உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை வந்திருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட அணி வகுப்பு மரியாதையின் போது அவரை துப்பாக்கியால் தாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap