இலங்கை பிரதான செய்திகள்

புதிதாக தெரிவானவர்களுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்க ஐ.தே.க.தீர்மானம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய தேசியகட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அமைய நியமிக்கப்பட்ட புதிய பொதுச் செயலாளர், பிரதிச் செயலாளர், உப தலைவர், தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு தெரிவானவர்களுக்கு கட்சியின் முழுமையான அதிகாரத்தை வழங்க அந்தகட்சி தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், கட்சியின் கீழ் மட்ட மற்றும் தேசிய மட்டத்திலான பொறுப்புகளை முன்னெடுக்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள அகில விராஜ் காரியவசத்திற்கு கட்சியின் தலைமையக பணிகள், அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளுடன் செயற்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரசார நடவடிக்கைகளுக்கான பொறுப்பு ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க விவகாரங்களுக்கான செயலாளராக அஜித் பீ. பெரேராவுக்கு அதிகளவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.