இலங்கை பிரதான செய்திகள்

முன்னாள் கடற்படை லெப்டினட் மில்லனியகே சமுத்ர டி கொஸ்தா கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அவன்கார்ட் மிதக்கும் ஆயுத கப்பலின் நடவடிக்கை முகாமையாளராக கடமையாற்றிய முன்னாள் கடற்படை லெப்டினட் மில்லனியகே சமுத்ர டி கொஸ்தா நேற்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் எம்.பி. அவன்கார்ட் என்ற மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்துள்ளார். இந்த கப்பலை கடற்படையினர் கடந்த 2015 ஆம் ஆண்டு கைப்பற்றினர்.

கைதுசெய்யப்பட்ட கடற்படை அதிகாரியிடம் விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் களனி வனவாசல பகுதியை சேர்ந்த 43 வயதான முன்னாள் அதிகாரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers