உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

பண்டக்குறி குறித்த வழக்கில் லயனொல் மெஸ்ஸிக்கு வெற்றி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உலகின் முதனிலை கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான லயனொல் மெஸ்ஸி, பண்டக்குறி குறித்து தொடுத்திருந்த வழக்கு ஒன்றில் சாதக தீர்ப்பு கிடைத்துள்ளது. உலகில் அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்தாட்ட வீரராக மெஸ்ஸி கருதப்படுகின்றார். விளையாட்டுப் பண்டங்களில் தமது பெயரை பண்டக்குறியாக பயன்படுத்திக் கொள்ள அனுமதியளிக்குமாறு அவர் நீதிமன்றில் கோரியிருந்தார்.

ஐரோப்பிய நீதிமன்றில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த குறித்த வழக்கின் தீர்ப்பு மெஸ்ஸிக்கு சாதகமாக அளிக்கப்பட்டுள்ளது. ஸ்பெய்னின் சைக்கிள் உற்பத்தி நிறுவனமொன்று மெஸி என்னும் பெயரில் சைக்கிள்களை உற்பத்தி செய்து வருகின்றது.

மெஸ்ஸி என்ற பெயரில் விளையாட்டுப் பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டால் அது தமது வர்த்தகத்தை பாதிக்கும் என நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. எனினும் வழக்கு விசாரணைகளின் போது மெஸ்ஸியும் பிரபல்யமானவர் என்ற காரணத்தினால் பண்டக்குறியாக தமது பெயரை பயன்படுத்துவதற்கு மெஸ்ஸிக்கு உரிமையுண்டு என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Barcelona’s Argentine soccer player Lionel Messi (R) sits in court with his father Jorge Horacio Messi during their trial for tax fraud in Barcelona, Spain, June 2, 2016. REUTERS/Alberto Estevez/POOL TPX IMAGES OF THE DAY

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap