உலகம் பிரதான செய்திகள்

பொதுமக்கள் -சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் வடகொரியா அணு சோதனை கூடங்களை மூடவுள்ளது


பொதுமக்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் அடுத்த மாதம் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என தென்கொரிய ஜனாதிபதியின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  தென்கொரிய ஜனாதிபதிகள் அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம இரு நாடுகளுக்குமிடையில் 65 ஆண்டுகளாக நிலவிய நிலவிய பகையை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவது என்பது அமைந்திருந்தது. இரு நாட்டுத்தலைவர்களின் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், எதிர்வரும் மே மாதம் பொதுமக்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் ஜூன் மாதத்தில் கிம் ஜாங் உன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்திக்க உள்ள நிலையில், இது ஒரு முக்கிய நகர்வாக கருதப்படுகின்றது.

This TV footage from the National Chinese Television channel shows the public demolition of North Korea’s cooling tower at its Yongbyon nuclear complex on June 27, 2008. North Korea blew up the cooling tower to symbolise the communist state’s commitment to scrapping its nuclear programme. AFP PHOTO/CCTV/ RESTRICTED TO EDITORIAL USE

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.