இலங்கை பிரதான செய்திகள்

ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்கள், பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளை பகிஸ்கரிக்கத் தீர்மானம்?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கும் நிகழ்வுகளை பகிஸ்கரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். கட்சியின் மறுசீரமைப்புக்கள் குறித்து திருப்தி கொள்ளாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

ருவான் விஜேவர்தன குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கட்சி;யில் மறுசீரமைப்பு செய்வதாக கூறிய போதிலும், இந்தப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் இதனால் சுமார் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளை பகிஸ்கரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.