இலங்கை பிரதான செய்திகள்

சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி மட்டுமே விஞ்ஞானபூர்வ அடிப்படையிலானது :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி மட்டுமே விஞ்ஞானபூர்வ அடிப்படையிலானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விஜயமுனி சொய்சாவிற்கு மீன்பிடித்துறை மற்றும் கடற்றொழில் வள அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவரது இருப்பிடம் கடல் சார்ந்த இடமன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஞ்ஞானபூர்வமாக அமைச்சுக்களை தெரிவு செய்வதாக அரசாங்கம் கூறி போதிலும் அவ்வாறான ஓர் விடயத்தை காண முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சியில் தொடர்ந்தும் நீடிக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு பல்வேறு மோசமான காரியங்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சரவை அமைச்சர்களின் முகங்களை மாற்றுவதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.