குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னர் இரண்டு பிரதான கட்சிகளும் சிறுபான்மை இன கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட புதிய இணக்கப்பாட்டு உடன்படிக்கைகளை உடனடியாக நாட்டுக்கு வெளியிட வேண்டும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் புதிய தரப்பினருடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை என்ன என்பது இன்னும் நாட்டுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. அந்த உடன்படிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன என்பது நாட்டுக்கு மிகவும் முக்கியமானவை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி உட்பட பல சிறுபான்மை கட்சிகளுடன் அரசாங்கம் உடன்படிக்கைகளை செய்துக்கொண்டுள்ளது.
அமைச்சரவை மாற்றமானது நாட்டினதும் அரசாங்கத்தினதும் நெருக்கடிகளை தீர்க்க காரணமாக அமையாது. இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கும். அரசாங்கம் அமைச்சர்களின் தலைகளை மாற்றிய போதிலும் நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Add Comment