குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்டி வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 27 சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட உள்ளனர்.
மஹாவோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Add Comment