உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடம்


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச  கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையினால் வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து, 125 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. 122 புள்ளிகளுடன் இந்தியா, முதலாம் இடத்திலிருந்து 2ம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

3ம் இடத்தில் தென்னாப்பிரிக்காவும் 4ம் இடத்தில் நியூசிலாந்தும் 5ம் இடத்தில் அவுஸ்திரேலியாவும் உள்ளன.
இலங்கை 7ம் இடத்தில் உள்ளன. இதற்கு முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி , ஐந்தாண்டுகளுக்கு பின்னர் அந்த அணி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான தரவரிசையில் 130 புள்ளிகளுடன் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா தொடர்ந்து 2வது இடத்திலும் இநதியா மூன்றாவது இடத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.