உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

மினி உலகக் கால்பந்தாட்டப் போட்டித் தொடர் ஒன்றை நடாத்த பரிந்துரை:

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மினி உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் ஒன்றை நடாத்துவது தொடர்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் தலைவர் ஜியனி இன்பண்டினோ ( Gianni Infantino ) இது குறித்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் எட்டு நாடுகளின் பங்களிப்புடன் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கு மேலதிகமாக வழமையான உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 2021ம் ஆண்டு முதல் ஒவ்வொரு இரண்டாண்டுக்கு ஒரு தடவையும் ஒக்ரோபர்-நவம்பர் மாதங்களில் இந்தப் போட்டித் தொடர் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.