இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு – புறக்கணித்த த.தே.கூ உறுப்பினர்கள் உட்பட 11 உறுப்பினர்கள் :

மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை(3) காலை 10 மணியளவில் இடம் பெற்றது. போது குறித்த நிகழ்வை மன்னார் பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேர் உள்ளடங்களாக 11 உறுப்பினர்கள் பகிஸ்கரித்துள்ளனர்.

குறித்த நிகழ்வு இன்று மன்னார் பிரதேச சபையில், மன்னார் பிரதேச சபையின் செயலாளர் திருமதி டி.எம்.வி.லோகு தலைமையில் இடம் பெற்றது. இதன் போது மன்னார் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களையும் வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சி,ஈ.பி.டி.பி,தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மற்றும் சிறிலங்கா முஸ்ஸீம் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் , உறுப்பினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 2 பேர் உட்பட 11 உறுப்பினர்கள் குறித்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.