இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ்சை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதனையடுத்து 178 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.