ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகின்ற நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நடக்கும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ள அவர் சென்னையிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் வேலூர் செல்ல உள்ளார்.
சென்னையில் அவர் இருநாட்களும் ஆளுநர் மாளிகையில் உள்ளநிலையில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவிலும் குருநானக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளவுள்ளதுடன் சில புதிய அரசு கட்டிடங்களையும் திநற்து வைக்கவுள்ளார்.
இந்தநிலையில் அவரது பாதுகாப்பிற்காக 3,500 காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment