உலகம் பிரதான செய்திகள்

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மட்ரிட் அணி 3-வது முறை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்


சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 3-வது முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ரியல் மட்ரிட் அணி சாதனைப் படைத்துள்ளது.  இரண்டு பிரிவாக நடைபெற்ற அரையிறுதி போட்டிகள் முதலாவது போட்டியில் பேயர்ன் முனிச்சை எதிர்கொண்ட ரியல் மட்ரிட் அணி 2-1 என வெற்றி பெற்றது.

2வது போட்டியில் பென்சிமா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 2-2 என சமநிலையில் நிறைவடைந்ததால் 4-3 என ரியல் மட்ரிட் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ரியல் மட்ரிட் அணியும் லிவர்பூல் அணியும் போட்டியிடவுள்ளன.

தற்போது 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ரியல் மட்ரிட் அணி இறுதிப் போட்டியில் வெற்றியீட்டினால் தொடர்ச்சியாக 3-வது முறை சம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers