இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

நீட் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு உதவும் திரையுலகப் பிரபலங்கள்

தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகள் போராட்டங்கள் ஏற்பட்டதன் பின்னர்  நீட் பரீட்சையை தமிழகம் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் சந்திக்கின்றனர். அந்த வயைில் இப் பரீட்சையை எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லுகின்றனர்.

இவர்களுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் உதவ முன்வந்துள்ளனர். அந்த வகையில்  தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஷால் நீட் பரீட்சை எழுதும் மாணவர்கள் எந்த உதவி வேண்டுமானாலும் தன்னை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நடிகர் விஷால் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் நீட் பரீட்சை விவகாரத்தில்  தமிழக மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப் பட்டிருப்பதாகவும்  வருங்கால சமூகத்திற்கு சேவை செய்வ தற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் தம்பி, தங்கைகளுக்கு உதவுவது தன் கடமை என்றும் விஷால் கூறியுள்ளார்.

அவர்களுக்கு உதவிக் கரம் கொடுக்க  எப்போதும் தயாராக இருப்பதாகவும்  சகோதரனாக நினைத்து தன்னை தொடர்பு கொள்ளலாம் (தொலைபேசி எண்: 97104 44442.) என்றும் நடிகர் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  நீட் தேர்வு எழுதவுள்ள இரண்டு பேருக்கான போக்குவரத்து மற்றும் மற்ற செலவுகளுக்கு பொறுப்பேற்பதாக நடிகர் பிரசன்னா கூறியுள்ளார். அதேபோல் நடிகை கஸ்தூரியும் அவரது ருவிட்டர் பக்கத்தில் நீட் பரீ்ட்சை எழுதும் மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவுவதாக தெரிவித்து வருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.