இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


திம்புள்ள பத்தனை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட பத்தனை ஜயசிரிபுர பகுதியில் வீடு ஒன்றின் கொள்ளப்புறத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட அவிசாவளை ருவான்வெல்ல பகுதியை சேர்ந்த நால்வரை பத்தனை காவற்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் இடம்பெற்றதாக பத்தனை பொலிஸ் நிலைய காவற்துறை  உப பரிசோதகர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, பத்தனை ஜயசிரிபுர பகுதி வீடு ஒன்றில் பின்புறத்தில் அவிசாவளை ருவான்வெல்ல பகுதியில் இருந்து வருகை தந்திருந்த நான்கு நபர்கள் வௌவேறு இடங்களிலிருந்து மாணிக்ககற்கள் அடங்கிய மண்களை கொண்டு வந்து அதனை குறித்த வீட்டின் பின்பகுதியில் இரகசியமான முறையில் மாணிக்ககற்களை அகழக்கூடிய உபகரணங்களை வைத்துக்கொண்டு மாணிக்ககற்களை பெறும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பத்தனை காவற்துறையினர் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டு சந்தேக நபர்களை மாணிக்ககற்கள் அகழும் உபகரணங்களுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் காவற்துறை  விசாரணைகளை மேற்கொண்டதன் பின்பு 05.05.2018 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.