உலகம் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் – சிமோனா ஹாலெப் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் – வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்தர வீராங்கனையான சிமோனா ஹாலெப், வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டிய ஒன்றில் ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் 6-1, 6-0 என்ற நேர்செட்டில் ரஸ்யாவைச் சேர்ந்த மகரோவாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் எஸ்தோனியாவின் அனெட் கோன்டாவெய்ட்டிடம் 6-3, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

அதேவேளை மற்றொரு போட்டியில் பிரெஞ்ச் ஓபன் சம்பியனான லாத்வியாவைச் சேர்ந்த ஜெலீனா ஆஸ்டாபென்கோ 3-6, 3-6 என்ற நேர்செட்டில் ருமேனியாவைச் சேர்ந்த கேமெலியா பெகுவிடம் தோல்வி கண்டு வெளியேறினார். மேலும் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா மற்றும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோரும் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.